News March 19, 2024
மாநிலங்களவை எம்.பி + மத்திய அமைச்சர் பதவி?

மக்களவைத் தேர்தலில் பாஜக-பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விசாரித்தபோது, அதிமுகவுடன் 7+1 பங்கீட்டை நிறைவு செய்த பாமகவை தங்கள் பக்கம் இழுக்க 10+1 தொகுதிகளுடன், ஆட்சி அமைந்ததும் மத்திய அமைச்சர் பதவி பற்றி முடிவு செய்யலாம் என பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.
Similar News
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.
News November 21, 2025
NATIONAL 360°: வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலி

*உ.பி., பள்ளி ஒன்றில் கேஸ் லீக்கின் காரணமாக 16 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். *டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். *திரிபுராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலியாகினர். *மும்பையில் காற்றுமாசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் வாக்கிங் போவதில் இப்படி ஒரு சிக்கலா?

குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அதில் காற்று மாசுகள் படிந்துகொள்ளும். காலை வாக்கிங் செல்லும் அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிப்பை, N95 மாஸ்க் அணிவது, அதிக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது உள்ளிட்டவைகள் மூலம் தவிர்க்க முடியும் எனவும் கூறிகின்றனர். SHARE IT


