News August 22, 2024
அமெரிக்கா செல்லும் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசு முறை பயணமாக வருகிற 23 முதல் 26ஆம் தேதி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசக உதவியாளர் ஜேக் சல்லிவன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்டு ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பாதுகாப்பு சார்ந்த இருநாட்டு உறவுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.
Similar News
News December 9, 2025
RSS நிகழ்ச்சியில் பங்கேற்கும் சீமான்

சென்னையில் RSS நடத்தும் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழாவில், சீமான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்: தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு’ என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில், ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் தேசியம் பேசும் சீமான், RSS நிகழ்ச்சியில் பேசுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 9, 2025
International 360°: US-க்கு மாற்றாக ஐரோப்பா அமைதி ஒப்பந்தம்

*வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரிக்கு $108.4 பில்லியன் வழங்க முன்வந்த பாரமவுண்ட். *AI-க்கான தேசிய விதியை உருவாக்க உள்ளதாக டிரம்ப் அறிவிப்பு. *ஐரோப்பா அமைதி ஒப்பந்தம் விரைவில் தயாராக உள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல். *நைஜீரியாவில் ஆயுத குழுக்களால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்கள், ஒரு மாதத்திற்கு பின் மீட்பு. *ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் முடிவுகள் 3 நாள்கள் நிறுத்தத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
News December 9, 2025
இன்று அனல் பறக்க போகும் நாடாளுமன்றம்

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


