News August 22, 2025

சுபான்ஷு சுக்லாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

image

சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ககன்யான் திட்டம், சுக்லாவின் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள் குறித்து விவாதித்தாகவும், அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

வரலாற்று சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20களில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார். இச்சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைப்பார்.

News August 22, 2025

விஜய் கருத்து ஒரு மொட்டை கடிதாசி: கமல்ஹாசன்

image

மதுரையில் நடந்த TVK 2-வது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் எனது பெயரையோ அல்லது வேறு யார் பெயரையோ குறிப்பிட்டு இந்த கருத்தை கூறாத போது, நான் ஏன் முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போட வேண்டும் என கேட்டார். மேலும் விஜய்யை தனது தம்பி என்றும் தெரிவித்தார்.

News August 22, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 22 – ஆவணி 6 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶ எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: அமாவாசை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

error: Content is protected !!