News June 26, 2024
‘கூலி’ படத்தில் ரஜினியின் மாஸ் லுக்

‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் லுக் டெஸ்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News March 17, 2026
ஈரான் தலைவர் ஓர் தன்பாலின ஈர்ப்பாளர்: US உளவுத்துறை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என US உளவுத்துறை நம்புவதாக New York Post தெரிவித்துள்ளது. அவர், தனது சிறுவயதில் ஆசிரியர் ஒருவருடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப்பிடம் கூறியபோது அவர் சிரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஓரினச்சேர்க்கை குற்றம் என இருக்கும் நிலையில், இந்த தகவல் தற்போது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
News March 17, 2026
பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.
News March 17, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது


