News April 4, 2025
ஆகஸ்ட் 14-ல் ரிலீசாகிறது ரஜினியின் கூலி படம்!

ரஜினியின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி விசில் அடிப்பது போன்ற புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி படத்துக்கு யாரெல்லாம் வெய்ட்டிங்?
Similar News
News December 26, 2025
SK-க்கு லவ் ஸ்டோரி சொன்ன சுதா கொங்கரா

‘பராசக்தி’ கதைக்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் லவ் ஸ்டோரி ஒன்றை சொல்லி ஓகே வாங்கியதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அதன்பிறகே பராசக்தி கதையின் சில பகுதிகளை கூறியதுமே சிவா ஓகே சொல்லிவிட்டதாகவும், முழு ஸ்கிரிப்டையும் கேட்காமலே படத்திற்கு டிச., 2024 முதல் கால்ஷீட்டை ஒதுக்கியதாகவும் சுதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒருவேளை சுதா இயக்கத்தில் சிவா லவ் ஸ்டோரியில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
News December 26, 2025
திருமாவளவனும் சங்கி தான்: தமிழிசை

வடமாநிலங்களின் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களை உருக்குலைத்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, தமிழகத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமா விமர்சித்திருந்தார். இந்நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு முத்திரை குத்தக்கூடாது என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திருமாவளவனும் சங்கி தான் என அவர் காட்டமாக சாடினார்.
News December 26, 2025
டிசம்பர் 26: வரலாற்றில் இன்று

*1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
*1791 – சார்ல்ஸ் பாபேஜ் பிறந்தநாள்.
*1925 – நல்லகண்ணு பிறந்தநாள்.
*2004 – சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 3 லட்சம் பேர் வரை இறந்தனர்.
*2024 – மன்மோகன் சிங் நினைவுநாள்.


