News June 25, 2024
சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த்?

பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் கால் பதித்த இளம் இயக்குநர் அட்லி, அடுத்ததாக சல்மான் கானுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு ஹீரோக்கள் நடிக்கும் வகையில் அதிரடி ஆக்சன் கதையம்சத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்க பல நடிகர்களை படக்குழு பரிசீலித்ததாகவும், இறுதியில் ரஜினிகாந்தை முடிவு செய்திருப்பதாகவும் இந்தி இணையதளங்களில் தகவல் பரவியுள்ளது.
Similar News
News December 5, 2025
சற்றுமுன்: விலை மளமளவென சரிந்தது

கார் பிரியர்களுக்கு சிறப்பான செய்தியை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் Arena ஷோரூம்களில் பல மாடல் கார்களுக்கு, டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ₹58,100 வரை கஸ்டமர்கள் சேமிக்கலாம். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News December 5, 2025
உடல் எடையை குறைக்கும் ‘ஓட்ஸ் தோசை’

உடல் எடையை குறைக்கும் டயட் முறைகளில் பொதுவாக ஓட்ஸ் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைப்பர். ஆனால் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது கடினமாக இருக்கும். எனவே ஓட்ஸை தோசையாக செய்து சாப்பிட சொல்கின்றனர் நிபுணர்கள். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளது. இதனால் ஒருநாளைக்கு ஒருமுறையாவது இதை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கும், உடல் எடையை குறைக்கவும் உதவுவதாக கூறுகின்றனர். SHARE.
News December 5, 2025
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள MP கமல்ஹாசன்,
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது தான் என்று கூறியுள்ளார். மேலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘அன்பே சிவம், அறிவே பலம்’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.


