News January 5, 2025
கோயில் கட்டிய ரசிகரை நேரில் அழைத்த ரஜினி

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். அதனால் தனது தலைவனுக்கு கோயில் கட்டி, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரஜினி, உடனே தனது ரசிகரையும், அவரது குடும்பத்தினரையும் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அனைவரிடமும் பேசி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Similar News
News September 15, 2025
கிரியாஊக்கியாக திகழ்ந்த அண்ணா: கமல்ஹாசன்

நாடக கலையில் தொடங்கி திரை கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாக அண்ணா திகழ்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாக திகழ்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News September 15, 2025
செங்கோட்டையனுடன் இணைந்தார் ஓபிஎஸ்

எம்ஜிஆர், ஜெ., ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால், பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்முறையாக உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ள அவர், அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது அரசியல் ரீதியாக இணைந்துள்ளதால், அதிமுகவில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 15, 2025
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது?