News May 13, 2024

‘வேட்டையன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி

image

‘ஜெயிலர்’ படத்தையடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, மும்பை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 3, 2026

வாஜ்பாய்க்கு முரட்டு அடிமை கருணாநிதி: EPS

image

கருணாநிதி யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என மக்களுக்கு தெரியும் என்று EPS விமர்சித்துள்ளார். மோடியின் முரட்டு பக்தர் EPS என <<19537003>>உதயநிதி<<>> பேசியதற்கு பதிலடி கொடுத்த அவர், இதை கண்டுபிடித்ததற்காக உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் எனவும் கிண்டலடித்தார். மேலும், கருணாநிதி அப்போதைய PM வாஜ்பாய்க்கு முரட்டு பக்தனாக இருந்ததாகவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

விலை ₹30,000 குறைந்தது.. HAPPY NEWS

image

MG நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News April 3, 2026

காபி குடிச்சதும் தண்ணீர் குடிக்கிறீங்களா?

image

காபி குடித்ததும், உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. காபி குடித்த பிறகு நாக்கில் சுவை மொட்டுகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால், இதனால் சில பிரச்னைகள் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி பருகுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகலாம். *வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படலாம். SHARE IT.

error: Content is protected !!