News May 4, 2024
ராகவா லாரன்ஸுக்கு ரஜினி வாழ்த்து

ஏழை மக்களுக்கு உதவும் லாரன்ஸின் பணி சிறக்க வேண்டும் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல ஆயிரம் மக்களுக்கு உதவும் வகையில் புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸை வாழ்த்துவதாக தெரிவித்த அவர், இறைவனின் ஆசி அவருக்கு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மே 1இல், ‘மாற்றம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸ் ஏழைகள், மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவ உள்ளதாக தெரிவித்திருந்தார்.
Similar News
News March 11, 2026
வங்கி கணக்கில் மேலும் ₹1,000.. ரங்கசாமி அறிவித்தார்

புதுச்சேரியில் மார்ச் 9-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ₹5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, புத்தகப் பை, காலணி வாங்குவதற்காக 80,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பெற்றோர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இத்திட்டம் வேண்டுமா?
News March 11, 2026
BIG NEWS: பெட்ரோலுக்கும் தட்டுப்பாடா.. அடுத்தடுத்து ஷாக்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் பெட்ரோல் கையிருப்பு இம்மாதம்(மார்ச்) வரை மட்டுமே இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பெட்ரோல் தட்டுப்பாடு தற்போதுவரை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அச்சம் காரணமாகவே பலரும் பெட்ரோலை கேன்களில் வாங்கி கையிருப்பு வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை எப்போது முடியுமோ?
News March 11, 2026
செல்போன் Radiation அதிகரித்தால்..

செல்போன் கதிர்வீச்சுக்கள் உடல் செல்களை வெப்பமாக்குமாம். அதிகப்படியான கதிர்வீச்சினால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஹார்மோன் மாற்றத்தினால், மன அழுத்தம், பதற்றம் & தூக்கமின்மை பிரச்னைகளும் ஏற்படுமாம். SAR வழிகாட்டுதலின்படி, செல்போன் கதிர்வீச்சு ஒரு கிலோகிராம் திசுவுக்கு 1.6 வாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்க போனின் Radiation-ஐ அறிய, ‘*#07#’ டயல் பண்ணுங்க.


