News May 30, 2024
ஆன்மீக பயணத்தைத் தொடங்கினார் ரஜினி

ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் ரஜினி, இன்று உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள புனித ஸ்தலத்திற்கு சென்றுள்ளார். நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்மீக பயணம், ஒவ்வொரு ஆண்டும் தனக்கு புது அனுபவத்தைப் தருகிறது என்றும், இம்முறையும் பெறப் போகிறேன் என்றும் தெரிவித்தார். ஒருவாரம் அங்கு தங்கி பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட உள்ளார்.
Similar News
News August 22, 2025
Fantasy App-களை கைவிடும் BCCI?

IPL-க்கு MY 11 CIRCLE App ஸ்பான்ஸர் செய்து வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்ட ஆன்லைன் கேமிங் மசோதாவால், இந்த ஆப் முடங்கும் சூழலில் உள்ளது. இதுபற்றி பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே BCCI செயல்படும் என்றார். அரசு உத்தரவிட்டால், கடந்த காலங்களில் சிகரெட், மது நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்து செய்தது போல், இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பும் ரத்தாகும் என்றார்.
News August 22, 2025
கூட்டணி இல்லை.. அதிமுக அதிகாரப்பூர்வ முடிவு

விஜய் உடன் கூட்டணி என்ற முடிவை அதிமுக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை தவெக மாநாட்டில் அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர், சினிமா வசனம் மட்டும் பேசி CM ஆக முடியாது என EPS, விஜய்க்கு பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக ADMK மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது கழகத்தை விமர்சிக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் EPS உறுதியாக உள்ளார் என திட்டவட்டமாக கூறினார். உங்கள் கருத்து?
News August 22, 2025
அன்பை கொடுத்து யாரும் ஏமாறுவதில்லை..

நான் மற்றவர்களுக்கு நல்லதே நினைத்தாலும், எனக்கு நல்லது நடக்க மாட்டேங்குது. பல இடங்களில் ஏமாளியாக நிற்கிறேன், ஈசியாக ஏமாற்றப்படுகிறேன் என புலம்புபவரா? ஒன்றே ஒன்றை மனதில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு அன்பை கொடுத்து ஏமாற்றபட்டால், கொஞ்சமும் மனம் சஞ்சலம் அடைய தேவையில்லை. ஏமாற்றப்படுவது நீங்கள் அல்ல.. அவர்கள்தான். இந்த உலகிற்கு என்ன கொடுக்கிறீர்களோ, அதுவே திரும்ப வரும். அன்பை மட்டுமே பகிர்வோம்.