News May 15, 2024
ரசிகர்களை சந்திக்கும் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், விரைவில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய படம் ரிலீசாவதற்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பதை ரஜினி வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால், ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் நேரில் கலந்துரையாட ரஜினி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News September 19, 2025
செப்டம்பர் 19: வரலாற்றில் இன்று

*1893 – உலகில் முதன்முறையாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் சொற்பொழிவை நிகழ்த்தினார். *1965 – இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள். *1980 – தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் உயிரிழந்த நாள். *1985 – மெக்சிகோவில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 9,000 பேர் உயிரிழந்தனர்.
News September 19, 2025
கோயில் மர்ம மரணம்: தோண்ட தோண்ட எலும்புகள்

கர்நாடகா <<17492852>>தர்மஸ்தலா கோயில்<<>> மர்ம மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த கோயில் நிர்வாகி, பொய் புகார் அளித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், கோயிலுக்கு அருகில் உள்ள பங்களாகுட்டா வனப்பகுதியில், கடந்த 2 நாள்களாக தோண்ட தோண்ட மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நாள்களில் மட்டும் 7 மண்டை ஓடுகள், ஏராளமான எலும்புகள், சேலைகள் சிக்கியுள்ளன.
News September 19, 2025
இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கியது

குரேஷியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் வெண்கலம் வென்றுள்ளார். ஸ்வீடன் வீராங்கனை ஜோனா டெனிஸை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். போட்டி தொடங்கியது முதல் சக வீரர் தகுதி நீக்கம், பதக்கம் வெல்லாதது என இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்ட நிலையில், இந்தியா வெறும் கையுடன் திரும்பாது என்பதை அண்டிம் உறுதி செய்துள்ளார்.