News March 31, 2024
போலந்தில் உணவகம் நடத்தும் ரஜினி பட நடிகை

ரஜினிபட ஹீரோயினாக நடித்த ரதி அக்னிஹோத்ரி, போலந்தில் இந்திய உணவகம் நடத்தி வருகிறார். ரஜினியுடன் முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை படங்களிலும், கமலுடன் உல்லாச பறவைகள், இந்தியில் ஏக் துஜே கேலியே படங்களிலும் நடித்த ரதி, பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 1985ல் தொழிலதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்த ரதி, 2015ல் விவாகரத்து செய்தார். தற்போது போலந்தில் உணவகத்தை நடத்தி வருகிறார்.
Similar News
News October 30, 2025
NDA கூட்டணி CM வேட்பாளர் யார்? அமித்ஷா பதில்

பிஹார் தேர்தலில் NDA வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். CM வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளதாக கூறிய அவர், தேர்தலுக்கு பின் அவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார். ஆனால், தற்போதைக்கு நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறோம் என்றார். இதனால், பிஹாரின் நீண்டகால CM நிதிஷ்குமார் மீண்டும் CM-ஆக தேர்வாகமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 30, 2025
இந்தியாவை உலுக்கிய டாப் ஊழல்கள்!

உலகின் மிகபெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஊழல் விவகாரங்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஊழல் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளோம். அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியலில் இன்னும் என்னென்ன ஊழல்களை சேர்க்கலாம்.. நீங்க கமெண்ட் பண்ணுங்க?
News October 30, 2025
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!

சபரிமலை சீசனை முன்னிட்டு, நவ.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை (கோயம்பேடு & கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் முதல் Non AC sleeper வசதி கொண்ட பஸ்கள் வரை இயக்கப்படவுள்ளன. டிச.27 முதல் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் டிச.29 வரை இந்த பஸ்கள் இயக்கப்படாது.


