News April 17, 2024
ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை தப்புமா?

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

தீவிரவாத மனப்பான்மை நீடிக்கும் வரை அமைதிக்கான நமது ஆபரேஷன் தொடரும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த தேசிய ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது தேசிய குணத்தை வெளிப்படுத்தியது என்றும், வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாக ஆபரேஷன் சிந்தூர் நினைவுகூரப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News January 15, 2026
பொங்கல் முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கு அதிர்ச்சி!

குறைவான முன்பதிவு காரணமாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரம்- கன்னியாகுமரி, 19-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை, 21-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில், 21-ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு கோவை போத்தனூர் – சென்ட்ரல், 21-ம் தேதி பகல் 1.50 மணிக்கு சென்ட்ரல் – போத்தனூர் ஆகிய ரயில்கள் ரத்தாகியுள்ளன.
News January 15, 2026
ICC விருதை தட்டித்தூக்கிய வீரர்கள்!

டிசம்பர் மாதத்திற்கான ICC-யின் சிறந்த வீரர் விருதை ஆஸி.,யின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் 31 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 3 சதங்கள் உட்பட 392 ரன்கள் குவித்து அவர் கவனம் ஈர்த்திருந்தார்.


