News February 17, 2025
ராஜன் செல்லப்பாவின் சிபாரிசு தேவையில்லை.. ஒபிஎஸ் பதிலடி

அதிமுகவில் சேர தனக்கு ராஜன் செல்லப்பாவின் சிபாரிசு தேவையில்லை என்று ஒபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் சேர வேண்டுமானால், 6 மாதங்களுக்கு ஓபிஎஸ் அமைதியாக இருக்க வேண்டும், அப்படியிருந்தால் இபிஎஸ்சிடம் பேசி சேர்ப்போம் என ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஒபிஎஸ், தங்களுக்கு சிபாரிசு வேண்டும் என யாரிடமும் கேட்கவில்லை என்றார்.
Similar News
News October 17, 2025
கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News October 17, 2025
விஜய் ஆண்டனி பெண்களுக்கு வைத்த வேண்டுகோள்

பெண்கள் 21 வயதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் நபர் நல்லவனாக இருந்தால் சரி. அப்படி இல்லையென்றால் அதை புரிந்துகொள்ளவே 10 வருடம் ஓடிடும். எனவே, காலேஜ் முடிச்சிட்டு கொஞ்ச வருடம் வேலை பாருங்க. 26, 27 வயசுல கல்யாணம் பண்ணுங்க என அவர் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து?
News October 17, 2025
தீபாவளி ஸ்பெஷல்; ஒரு ஸ்வீட் டப்பாவின் விலை ₹1.11 லட்சமா?

இந்த தீபாவளியில் இந்த ஸ்வீட்கள்தான் கவனிக்க வைத்துள்ளன. ஜெய்ப்பூரில் Swarn Prasadam என்ற ஸ்வீட், ஒரு கிலோ விலை ₹1.11 லட்சமாம். சாதாரண ஸ்வீட் போலில்லாமல், இதில் உண்ணக்கூடிய தங்கம் சேர்க்கப்பட்டு, ஸ்வீட் டப்பாவையும் தங்க நகை பெட்டி போல ரெடி செய்துள்ளனர். இத்துடன், Swarn Bhasma Bharat(₹85,000/kg), Chandi Bhasma Bharat (₹58,000/kg) என்ற ஸ்வீட்களும் மார்க்கெட்டில் இறங்கியுள்ளன.