News November 16, 2024

நவ.29இல் ரிலீஸாகும் ‘ராஜாகிளி’

image

‘ராஜாகிளி’ படம், நவம்பர் 29இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 50 வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தம்பி ராமையா தான் இசையமைப்பாளர்.

Similar News

News March 3, 2026

தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

image

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.

News March 3, 2026

சாதி மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா? அதிமுக

image

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கால், நாங்குநேரியில் கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா எனவும் அவர் சாடியிருக்கிறார்.

News March 3, 2026

இந்திய அணிக்கு ஷாக்: சஞ்சு சாம்சனுக்கு தடையா?

image

WI-க்கு எதிராக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Winning Shot-ஐ அடித்த பிறகு, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் முன், ஹெல்மெட்டை கழற்றி கிரவுண்டில் வீசினார். இது ICC வீரர்களின் நடத்தை விதி 2.2-ன்(கிரிக்கெட் உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்தால்) கீழ் விதிமீறல் எனப்படுகிறது. தடை விதிக்கப்பட்டால், ENG-க்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் விளையாட முடியாது.

error: Content is protected !!