News October 22, 2025
14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: IMD

TN-ல் காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதேபோல், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். SHARE IT.
Similar News
News March 26, 2026
X வலைதளம் முடங்கியது

சமூக வலைதளமான X பக்கம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளது. X பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை என்று ஏராளமானோர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது
News March 26, 2026
பொதுத்தேர்வு நிறைவு.. நாளை முதல் விடுமுறை!

TN முழுவதும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று நிறைவடைந்தது. கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல் உள்ளிட்ட தேர்வுகளை இன்று மாணவர்கள் எழுதினர். 7,99,692 மாணவர்களின் பள்ளிக் காலம் இன்றோடு நிறைவடைந்தது. வாழ்க்கையில் அடுத்தகட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ள மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்து நிதானமாக யோசித்து தெளிவான முடிவை எடுங்கள். All the Best மாணவர்களே..!
News March 26, 2026
நயினார் மீது வழக்கு போடுங்க: கோர்ட் படியேறிய திமுக

பாஜக மாநிலத் தலைவர் நயினார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால், நயினார் மீது ED வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திமுக வலியுறுத்தியுள்ளது.


