News September 5, 2024

இன்று இடி மின்னலுடன் மழை கொட்டும்: IMD

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் முன்னறிவித்து உள்ளது. மேலும், நாளை முதல் 10ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News August 4, 2025

Gpay, PhonePe யூஸ் பண்ணால் கட்டணமா? புதிய அறிவிப்பு

image

Google Pay, PhonePe, போன்ற UPI அக்ரிகேட்டர்களை பயன்படுத்தும் வணிகர்களுக்கு, ஆக.1 முதல் சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனை வங்கியை பொறுத்து, ஒரு டிரான்சாக்‌ஷனுக்கு அதிகபட்சமாக ரூ.6 முதல் ரூ.10 வரை கட்டண விதிக்கப்படும். பணம் நேரடியாக வணிகரின் ஐசிஐசிஐ கணக்குக்கு சென்றால் கட்டணம் இல்லை. எனினும், UPI பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இப்போதைக்கு கட்டணம் இருக்காது.

News August 4, 2025

ENG-ன் வெற்றியை பறித்த சிராஜ் மற்றும் கிருஷ்ணா

image

IND VS ENG இடையேயான 5-வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் எப்போதெல்லாம் இங்கி., கை ஓங்கியதோ அப்போதெல்லாம் சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். இரண்டு இன்னிங்க்ஸ் சேர்த்து சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் 8 விக்கெட்டுகளும் எடுத்தனர். மொத்தமுள்ள 20 விக்கெட்டுகளில் இருவரும் சேர்ந்து 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.

News August 4, 2025

மிரட்டலுக்கு அஞ்சோம்… ரஷ்ய ஆயில் வாங்கும் இந்தியா

image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; இல்லையெனில் வரிவிதிப்பு மற்றும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வார இறுதியில் கூட ரஷ்யாவிலிருந்து மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெய், இந்திய துறைமுகங்களை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!