News May 2, 2024

இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் எனக் கூறியுள்ளது.

Similar News

News January 29, 2026

நடிகை ஊர்வசியின் மகள் PHOTO

image

80’s காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் தேஜலட்சுமியும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’, தாய் ஊர்வசி நடித்து வரும் ‘பாப்லோ பார்ட்டி’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா என தேஜலட்சுமியின் போட்டோவை SM-ல் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

News January 29, 2026

கரூர் துயருக்கு விஜய் தான் காரணம்: EPS

image

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். சரியாக திட்டமிடாமல் விஜய் சென்றதாலேயே கரூரில் 41 பேர் இறந்ததாக குற்றஞ்சாட்டிய EPS, அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்றார். மேலும், விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் சிறந்த அரசியல் கட்சி என்றால் அது அதிமுக தான் என்றும் கூறியுள்ளார்.

News January 29, 2026

தமிழக அரசில் 999 காலியிடங்கள்.. ₹58,100 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 999 Nursing Assistant Grade II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு & Nursing Assistant பயிற்சி *18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் *சம்பளம்: ₹15,700- ₹58,100 *தேர்ச்சி முறை: மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு *பிப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.

error: Content is protected !!