News March 21, 2025
8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில் கோவை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News July 8, 2025
நாயால் 67 பேர் உயிர்பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்

ஹிமாச்சலின் சியாத்தி கிராமத்தில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்துள்ளது. எனவே உரிமையாளர் வந்து பார்க்க, சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வந்துள்ளது. பதறிய அவர், மொத்த கிராமத்தினரையும் அலர்ட் செய்ய, அவர்கள் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்துள்ளன. நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
News July 8, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க..

யாருக்கு தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே சிலர் பயங்கர உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT.
News July 8, 2025
Most Valuable IPL டீமில் CSK பின்னடைவு

Houlihan Lokey நடத்திய மதிப்பீட்டு ஆய்வின்படி, Most Valuable IPL அணியாக 2,305 கோடி உடன் RCB முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனையடுத்து, 2,073 கோடி உடன் MI 2-ம் இடத்தில் உள்ளது. IPL 2025-ல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட CSK 2013 கோடி உடன் 3-ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, KKR – 1,945 கோடி, SRH – 1,319, DC – 1,302, RR – 1,251, GT – 1,216, PBKS – 1,208 & LSG – 1,045 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.