News May 9, 2024
இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
சூர்யா படத்தை சுற்றும் பஞ்சாயத்து?

சூர்யா-R.J.பாலாஜி கூட்டணியின் ‘கருப்பு’ ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு வருவதாக இருந்தது. இதற்கான எடிட்டிங் பணிகளின் போது, சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்பதால் ரீ-ஷூட் செய்ய 15 நாட்கள் வேண்டும் என கூறியுள்ளாராம் பாலாஜி. ஆனால், சூர்யாவோ தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்க, தயாரிப்பு தரப்போ பட்ஜெட்டில் கறாராக இருக்க, செய்வதறியாமல் பாலாஜி தவிப்பதாக கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு வந்துடுமா?
News September 5, 2025
GALLERY: சென்னையின் இந்த அழகியலை ரசிச்சிருக்கீங்களா?

சென்னை என்றால் மெரினா கடற்கரையும், மகாபலிபுரமும்தான் சுற்றுலா தளம் என பலரும் எண்ணுகின்றனர். ஆனால், அவற்றை தாண்டியும் பல இடங்கள் சென்னையில் உள்ளன. பிஸியான நந்தம்பாக்கத்தில் சைலெண்டாக இருக்கும் கல்லறையில் தொடங்கி மாதவரம் பொட்டானிக்கல் கார்டன் வரையில் உள்ள சில இடங்களை பட்டியலிட்டுள்ளோம். படங்களை Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு சென்னையில் பிடித்த டூரிஸ்ட் இடம் எது.. கமெண்ட் பண்ணுங்க.
News September 5, 2025
செங்கோட்டையன் முடிவுக்கு இபிஎஸ் ரியாக்ஷன்

கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை ஒன்றிணைக்க, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்துள்ள நிலையில், அது தொடர்பாக பேச EPS மறுத்துவிட்டார். தேனியில், செய்தியாளர்கள் சந்திப்பு திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்துவிட்டு OPS-ன் சொந்த தொகுதியான போடிக்கு பரப்புரைக்கு சென்றுள்ளார். இதனிடையே, செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக EPS-ன் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.