News March 22, 2025
6 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழை கொட்டும்

இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை, சென்னை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
Similar News
News March 23, 2025
ஹமாஸின் முக்கியத் தலைவரை காலி செய்த இஸ்ரேல்

காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலால் அப்பாவிகள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர். கான் யூனிஸ்,ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தற்போதும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டார். கான் யூனிசில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சலாஹ்வின் மனைவியும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
News March 23, 2025
4 நாள்கள் தொடர் விடுமுறை!

அடுத்த வாரத்தில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 திங்களன்று (ரம்ஜான்), ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். விடுமுறையை வரவேற்று இப்போதே பலரும் சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். லீவுல உங்கள் பிளான் என்ன?
News March 23, 2025
1 மாம்பழம் ரூ.10,000… விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதை பார்த்திருப்போம். அதற்கு மாறாக தெலங்கானா விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயி சுமன்பாய், உலகிலேயே விலையுயர்ந்த 10 மியாசாகி வகை மாமரக் கன்றுகளை நட்டுள்ளார். தற்போது, அவை காய்க்கத் தொடங்கியுள்ளன. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.10,000 வரை விலை போகிறதாம். சுமன்பாய் காட்டில் பண மழைதான்!