News April 23, 2025
4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வருகிற 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: PM மோடி

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் இதுவரை 360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசிய மோடி, இந்தியா இலங்கை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
News December 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


