News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 503 ▶குறள்: அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. ▶பொருள்: அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.
News October 29, 2025
BREAKING: கரையை கடந்தது மொன்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே நள்ளிரவு 12:30 மணியளவில் கரையை கடந்ததாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 1-2 மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதனிடையே, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
News October 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 29, ஐப்பசி 12 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை


