News October 25, 2024
மழை: இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்குவதால், அந்த மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில், நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
ஜன நாயகன் படத்தில் அந்த மாதிரியான விஷயம் இல்லை

‘ஜன நாயகன்’ படத்தில் தணிக்கை வாரியம் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஹெச்.வினோத்தின் நண்பரும், இயக்குநருமான இரா.சரவணன் தெரிவித்துள்ளார். திரைக்கதை விவாதத்தின்போது தானும் உடனிருந்ததாக கூறிய அவர், ஜன நாயகன் திரைப்படம் ‘பகவந்த் கேசரி’ படத்தை தழுவினாலும், தணிக்கையில் சிக்கல் ஏற்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதில் வினோத் தெளிவாக இருந்தார் எனவும் கூறினார்.
News January 22, 2026
குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி: எ.வ.வேலு

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தங்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி <<18923157>>அதிமுகவினர் <<>> சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியிலும் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
News January 22, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


