News October 23, 2024
14 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை

இன்று (அக்.23) காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
Similar News
News January 15, 2026
ஐம்பூதங்களின் வழிபாடான பொங்கல் பண்டிகை

மதங்களை கடந்த, ஐம்பூதங்களின் வழிபாடாக பொங்கல் பண்டிகை உள்ளது. காற்றின் உதவியுடன் எரியும் நெருப்பில், மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீரை ஊற்றி, அதில் பச்சரிசி பொங்கல் வைத்து ஆகாயத்தில் உள்ள சூரியனுக்கு படைப்பதே பொங்கல் பண்டிகை. நிலம், நீர்,ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் உதவியுடன் மனிதன் பக்குவப்படும் இந்த வாழ்வை நினைவு கூறும் விழாவாகவும் கூறப்படுகிறது.
News January 15, 2026
EPS-யிடம் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிய பாஜக

தேமுதிக மற்றும் பல சிறிய கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்கும் பொறுப்பை EPS-யிடம் பாஜக கொடுத்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகளின் தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிக தொகுதிகளை கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சிறிய கட்சிகளின் பலம், தலைவர்களின் நெளிவு, சுளிவுகள் EPS-க்கு நன்றாக தெரியும் என்பதாலும் அவரிடம் முழுப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News January 15, 2026
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல், வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள், மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துகள் *மங்களம் பொங்கட்டும், மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும், எண்ணியது ஈடேற.. தைப்பொங்கல் வாழ்த்துகள் *தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்கட்டும்.


