News December 13, 2024
மக்களை சென்று சேராத மழை நிவாரணம்: EPS விளாசல்

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் பல இடங்களில் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாகச் செய்யாததால் டெல்டாவில் பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு அரசு, தங்குமிடம், உணவு வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 7, 2026
தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.
News March 7, 2026
ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?


