News June 5, 2024
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகாசி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், தருமபுரி, சென்னை, காஞ்சி, தி.மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்லவும்.
Similar News
News August 8, 2025
UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction ஃபெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1. வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2.நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3. கடைகளுக்கு செல்லும் போது கொஞ்சம் கையில் காசு வைத்து கொள்ளலாம். 4. டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.
News August 8, 2025
ராசி பலன்கள் (08.08.2025)

➤ மேஷம் – சுகம் ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – பிரீதி ➤ கன்னி – பக்தி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – பாராட்டு ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – நலம் ➤ கும்பம் – விருத்தி ➤ மீனம் – பரிசு.
News August 8, 2025
வைகோ-துரை வைகோ மோதல்?

பாஜக கூட்டணி தொடர்பாக வைகோ, துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக MP-க்களே அவ்வளவு எளிதாக மோடியை சந்தித்துவிட முடியாது என கூறப்படும் நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 முறை சந்தித்துள்ளார் துரை வைகோ. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பாமகவை போல மதிமுகவிலும் தந்தை-மகன் மோதல் ஏற்படுமா?