News March 20, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், TNஇல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 25 வரை TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2025

காதலனை வேவுபார்க்க புது ரூட்… பெண்கள் ரொம்ப உஷார்!

image

காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்று சொல்லுவார்கள். ஆனால், காதலன் தங்களை ஏமாற்றுகிறானா என்ற சந்தேகம் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும்போல. இங்கிலாந்தில் Cheat Eye என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், காதலனை துப்பறிவதற்காகவே டிண்டர் செயலியை லண்டன் பெண்கள் அதிகளவில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லண்டனில் 62.4%, மான்செஸ்டரில் 8.8%, பிர்மிங்கத்தில் 8.3% பெண்கள் இதற்காக டிண்டர் செயலியை பயன்படுகிறார்களாம்.

News March 20, 2025

எடை குறைப்பு, சர்க்கரை நோய்க்கு ஊசி வந்தாச்சு!

image

சர்க்கரை நோய் (டைப் 2) மற்றும் உடல் எடை குறைப்பிற்கு உலகளவில் பிரபலமான USAவின் Mounjaro மருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒற்றை டோஸ் குப்பி மட்டுமே தற்போது கிடைக்கும். இந்த மருந்தை வாரம் ஒரு முறை, அதுவும் பரிந்துரைக்கப்பட்ட உணவு, உடற்பயிற்சிகளுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் சர்க்கரை நோய், உடல் பருமனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News March 20, 2025

2025ல் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

image

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலை. வெளியிட்ட ‘World Happiness Report 2025’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி PAK 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளது. AFG கடைசி இடத்தில் உள்ளது.

error: Content is protected !!