News March 19, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல மார்ச் 22 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

Similar News

News March 19, 2025

செந்தில் பாலாஜி கைதாக வாய்ப்பு?

image

டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, அமைச்சர் <<15809905>>செந்தில் பாலாஜி<<>>க்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.சி.ஆரின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைதாகினர். அவர்களை போலவே, டாஸ்மாக் ஊழல் புகாரில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்பதால் அவர் டெல்லி சென்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 19, 2025

கணவனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மனைவி

image

உ.பி.யில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்றுள்ளார். லண்டனில் வணிகக் கப்பலில் அதிகாரியான சவுரப், தனது மனைவி முஸ்கானின் பிறந்தநாளுக்காக இந்தியா வந்துள்ளார். இதனிடையே, காதலனுடன் உறவில் இருந்த முஸ்கான், கணவனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, காதலனுடன் சேர்ந்து சவுரப்பை கொன்று துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் வைத்து சிமெண்டால் மூடியுள்ளார். போலீசார் விசாரணையில் இக்கொடூரம் தெரியவந்துள்ளது.

News March 19, 2025

பதவிக்கு நெருக்கடி.. டெல்லி சென்ற செந்தில் பாலாஜி

image

அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்ற அவர், சற்றுமுன் சென்னை திரும்பினார். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக EDயின் புகாரை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவர் டெல்லி சென்றதாகத் தெரிகிறது.

error: Content is protected !!