News October 9, 2025

கயாது காட்டில் பட மழை

image

சுந்தர் C இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில், கயாது லோஹர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் 2 ஹீரோயின்கள் எனவும், இன்னொரு ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ நடித்து முடித்த கயாது, சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபோக தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

Similar News

News October 9, 2025

உதயநிதியின் HIT LIST-ல் இருக்கிறாரா இந்த அமைச்சர்?

image

சீனியர் மா.செ., அமைச்சர்களை நீக்கி அந்த இடத்தில் இளைஞர் அணியினரை அமர்த்த உதயநிதி நினைப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, சரியாக பணி செய்யாத தலைகளை அவர் கண்டறிந்து வருகிறாராம். இந்நிலையில், திண்டுக்கலில் சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். எனவே, திண்டுக்கல் மா.செ.,வாக இருக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கு அடுத்த முறை சீட் வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

News October 9, 2025

தீபாவளி ரேஸில் இளம் நாயகர்களின் படங்கள்

image

தீபாவளி என்றால் பட்டாசு, வெடி, புத்தாடைகள் தாண்டி திரைப்படங்களுக்கு தனி இடம் இருக்கும். வழக்கமாக ஒரு பெரிய ஹீரோவின் படமாவது வரும். ஆனால் இந்த ஆண்டு இளம் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் வரிசை கட்டி நிற்கின்றன. தீபாவளிக்கு வர உள்ள படங்களின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள். எந்த படத்துக்கு நீங்க போக போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க…

News October 9, 2025

BREAKING: கனமழை வெளுத்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

TN-ல் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அந்த வகையில், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(அக்.9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!