News April 3, 2025

35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

இடி, மின்னலுடன் மழை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. லேசான மழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை.

Similar News

News April 9, 2026

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மக்களுக்கு ஏமாற்றம்

image

திமுக, அதிமுக, பாமக, அமமுக, <<19607806>>காங்கிரஸ்<<>> என பல முன்னணிக் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை எந்த கட்சியும் வாக்குறுதியாக அளிக்கவில்லை. இதனால், தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2021-ல் 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2026

மாம்பழம் முடக்கமா? ராமதாஸுக்கு பின்னடைவு

image

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய மேல்முறையீடு வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை 3-வது முறையாக HC நிராகரித்துள்ளது. மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டு விட்டதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால் ராமதாஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

News April 9, 2026

ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.

error: Content is protected !!