News October 20, 2024
காலை 7 மணி வரை 24 மாவட்டங்களில் மழை

இன்று (அக்.20) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 24 மாவட்டங்களை IMD வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
Similar News
News July 5, 2025
அஜித் குமார் மரணம்… பொங்கி எழுந்த ராஜ்கிரண்

அஜித் குமார் லாக்-அப் மரணத்திற்கு திரை பிரபலங்கள் குரல் கொடுக்காமல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸ் அடித்தே கொன்ற கொடுங்கொலையை நினைத்து நெஞ்சம் பதறுவதாக தெரிவித்த அவர், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவை இதுவரை கைது செய்து விசாரிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். தாடி பாலாஜியும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்திருந்தார்.
News July 5, 2025
டாப் 10 டெஸ்ட் ரன்கள் பட்டியலில் 2 இந்திய வீரர்கள்

25 ஆண்டுகளில் (2000 – தற்போதுவரை) டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 வீரர்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் – 13,109 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் – 10,590 ரன்களுடன் 7-வது இடத்திலும் & 10,080 ரன்களுடன் சச்சின் 10-வது இடத்திலும் உள்ளனர். நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலும் ஜோ ரூட் இடம்பெற்றதால் முதலிடத்தில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 5, 2025
APRO பணிகளில் திமுக ஐடி விங் ஊழியர்கள்? இபிஎஸ் தாக்கு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் திமுக ஐடி விங் ஊழியர்களை நியமிப்பதாக தகவல் வெளியாவதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை படிப்புடன், பத்திரிகை & மக்கள் தொடர்பு (அ) மீடியா சயின்ஸ் கட்டாயமாக்கப்பட்ட அரசாணையையும் திமுக அரசு திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்காக இவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.