News April 10, 2025

23 மாவட்டங்களில் மழை

image

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,தேனி, தென்காசி,கோவை,திருப்பூர், திண்டுக்கல்லில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நீலகிரி, ஈரோட்டில் மழை பெய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

வீட்டை சொர்க்கமாய் மாற்றும் செடிகள் இவைதான்

image

முன்பு வீட்டை சுற்றி மரம், செடி, கொடி என சூழ்ந்து இருந்ததால், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தோம். இன்று அப்பர்ட்மென்டுகளில் சுத்தமான காற்று கூட கிடைக்காமல், Air purifier வைத்து வாழ்த்து கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என்றாலும் வீட்டின் பால்கனியில் சில செடிகளை வைத்து வளர்த்தால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். அது என்ன செடிகள் என மேலே உள்ள SWIPE செய்து பாருங்கள்.

News October 22, 2025

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. *உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.

News October 22, 2025

NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

error: Content is protected !!