News April 11, 2025
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
Sports Roundup: கால்பந்து தரவரிசையில் இந்தியா சறுக்கல்

*சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திற்கு சறுக்கல். * நவ.27-ம் தேதி நடைபெறவுள்ள WPL கிரிக்கெட் ஏலத்திற்கு 277 வீராங்கனைகள் பதிவு. *ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். *டி20-ல் 19 முறை ஆட்டநாயகன் விருது வென்று சிகந்தர் ராசா சாதனை. *ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
News November 21, 2025
ஒரு நாள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

விடுமுறை இல்லாமல் SIR பணிகளை மேற்கொள்ளும் BLO-க்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கேரளா, மேற்கு வங்கத்தில் BLO-க்கள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால், பணிச்சுமையைக் குறைக்க MGNREGA பணியாளர்களை உதவிக்கு பயன்படுத்தி கொள்ளவும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SIR பணிகளை முடிக்க டிச.4-ம் தேதி கடைசி நாளாகும்.
News November 21, 2025
பஞ்சாங்கப்படி எதிர்க்கட்சி தான் ஆட்சிக்கு வரும்: நயினார்

பஞ்சாங்கத்தின் படி எதிர்க்கட்சி தான் ஆட்சிக்கு வரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், இன்று கூட பஞ்சாங்கம் பார்த்ததாக தெரிவித்துள்ள அவர், வரும் காலங்களில் ஆளும் கட்சிக்கு அதிகமாக தொல்லைகள் வரும் என்று குறிப்பிட்டார். அதனால், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ஆட்சிக்கும் வரும் என்று உறுதிபட தெரிவித்தார்.


