News April 13, 2025
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, காேவை, விருதுநகரில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News December 28, 2025
நாகை: பாலம் அருகே கிடந்த பிணம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் வெட்டாற்று பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
Sports 360°: செஸ்ஸில் இந்திய வீரர்கள் சறுக்கல்

*SA டி20-ல், பிரிடோரியா கேபிடல்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது *நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி, ஜன.3-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு *உலக ரேபிட் செஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்துள்ளனர் *மகளிருக்கான ஹாக்கி லீக் தொடர் ராஞ்சியில் இன்று தொடக்கம் *ILT20, முதலாவது குவாலிஃபையர்ஸில் Desert Viper-ஐ எதிர்கொள்கிறது MI Emirates
News December 28, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹5,600 உயர்ந்தது

ஆண்டின் இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன்படி டிச.20 முதல் டிச.27 வரையிலான வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,600 அதிகரித்து, ₹1,04,800 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் இந்திய சந்தையில் தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.


