News March 23, 2025
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை

கோடை வெயில் வாட்டி வைத்து வரும் வேளையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு (11 மணி வரை) 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணித்துள்ளது.
Similar News
News March 24, 2025
அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News March 24, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி அருகே பாறை வெடிப்பில் உயிரிழந்த சிறுமி காயத்ரியின் (10) குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்க்கால் வெட்டுவதற்காக பாறைக்கு வெடி வைத்தபோது சிதறிய கல் ஒன்று, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தலையில் பட்டது. இந்த செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன் என்று கூறியிருக்கும் முதல்வர், சிறுமியின் குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
News March 24, 2025
‘கலக்குறீங்க ப்ரோ’… பிரதீப்பை பாராட்டிய விஜய்…!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் வேகமாக வளர்ந்து வருகிறார். அவர் நடித்த லவ் டுடே, டிராகன் என 2 படங்களும் ஹிட் அடித்த நிலையில், கலக்குறீங்க ப்ரோ என நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் அனைவருக்கும் தனது உணர்வு புரிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.