News October 8, 2024
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
Similar News
News December 7, 2025
இப்போதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு: கோலி Open Talk

தெ.ஆ., உடனான தொடரில் தான் விளையாடிய விதம் தனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 2-3 வருடங்களில் தான் இப்படி விளையாடியதே இல்லை என கூறிய அவர், இப்போதுதான் மனதளவில் ஃப்ரீயாக உணர்வதாக கூறியுள்ளார். மேலும், களத்தில் தான் சிறப்பாக பேட்டிங் செய்தது இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
ஆவேசத்திற்கு தயாரான சூர்யா!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜையில் அவருடன் நாயகி நஸ்ரியா, மலையாள நடிகர் நஸ்லேன் போன்றோரும் கலந்து கொண்டனர். ‘சிங்கம்’ பட சீரிஸுக்கு பிறகு, இந்த படத்தில் மீண்டும் காக்கி உடையை சூர்யா அணியவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவே, ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
News December 7, 2025
என்னிடம் எந்த பாட்சாவும் பலிக்காது: CM ஸ்டாலின்

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களை அறிவித்த CM ஸ்டாலின், நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுவதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். மேலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அவர்கள் பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது’ என்றும் தெரிவித்தார்.


