News December 29, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

Similar News

News March 5, 2026

அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

image

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

News March 5, 2026

மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News March 5, 2026

CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

image

505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது வெறும் 13% தான்; ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!