News October 7, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரைக்கும் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News October 7, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

image

ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹89,600-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹75 உயர்ந்து ₹11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹90 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 7, 2025

அடுத்தடுத்து அப்டேட்களை வாரி வழங்கும் Whatsapp!

image

Whatsapp அடுத்தடுத்து பல அப்டேட்களை தர உள்ளது *Custom AI backgrounds: வீடியோ கால்கள், போட்டோக்களுக்கு AI மூலம் பிரத்யேக Background வைப்பது *Motion Photos support: போட்டோவை லைவ் Gif போல, சவுண்டுடன் போட்டோ பகிரலாம் *New Sticker packs: புதிதாக Emoji ஸ்டிக்கர்கள் போன்ற பல அப்டேட்கள் வரிசைக்கட்டியுள்ளன. இது Zoho-வின் Arattai-ன் போட்டியை சமாளிக்க கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என கூறப்படுகிறது.

News October 7, 2025

சற்றுநேரத்தில் முன்ஜாமின் மனு விசாரணை

image

கரூர் துயரச் சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் N.ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரின் மனுக்களும் இன்று 12 மணிக்கு மேல் விசாரணைக்கு வரவுள்ளது. தவெக தரப்பில் பிரபலமான வழக்கறிஞர் வாதாட இருப்பதால், ஜாமின் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தவெகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, இருவரின் முன்ஜாமின் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது.

error: Content is protected !!