News April 27, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News November 17, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். *சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை. *எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும். *சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
News November 17, 2025
SIR பணியில் இருந்த BLO தற்கொலை: வேலை அழுத்தமா?

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் SIR பணியில் இருந்த BLO அனீஷ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். SIR பணி அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 முக்கிய அமைப்புகள் BLO பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
News November 17, 2025
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, மச்சிலிப்பட்டினம், நரசாப்பூரில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தெலங்கானாவின் சார்லபள்ளியில் இருந்தும் அடுத்த 2 மாதங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படுகின்றன.


