News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 27, 2025
இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பதிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 27, 2025
இந்திய டி20 அணியின் கேப்டனாகிறாரா பும்ரா?

NZ-க்கு எதிரான டி20 தொடர் & டி20 உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இதற்கு பிறகு, டி20 அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கவுள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு ODI, டெஸ்ட் கேப்டனாக பும்ராவை நியமிக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் காயம் காரணமாக அடிக்கடி வெளியேறியதால் கில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
அழகிய லைலா லாஸ்லியா PHOTOS

நடிகை லாஸ்லியா மரியனேசன் இன்ஸ்டாவில் தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸை பதிவிட்டுள்ளார். ரெட் கலர் உடையில் ரசிகர்கள் ஹார்டில் ஃபயரு விடுகிறார். ஆளை சாய்க்கும் பார்வையை வீசுகிறார். அவரது, ஆட்டம் போடும் கால்களும், ஆடி பாடும் கண்களும் ஃபயரு ஃபயரு மா. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


