News April 22, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி & திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது.

Similar News

News December 10, 2025

இரவில் ஆண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

image

இணையத்தில் ஏதாவதொன்றை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும் தலைமுறையில் தான் நாம் உள்ளோம். இந்த தேடல் இரவிலும் நம்மை விடுவதில்லை. குறிப்பாக, ஆண்கள் இரவில் நல்ல இசை & சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். ஒரு பெண்ணை எப்படி இம்ப்ரஸ் செய்வது, மனைவியுடன் எவ்வாறு இணக்கமாக செல்வது போன்ற உறவு மேம்பாடு பற்றி தேடுகிறார்களாம். இதுதவிர ஹெல்த் டிப்ஸை கூகுளிடம் கேட்கிறார்களாம். நீங்க என்ன தேடுவீங்க?

News December 10, 2025

தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமனம்

image

தமிழகத்தின் புதிய டிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் உள்ள டிஜிபி வெங்கட்ராமன், 15 நாள்களுக்கு மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து, அவர் பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான அபய்குமார் சிங் IPS-ற்கு கூடுதல் பொறுப்பாக டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

பெண்களை பாதிக்கும் Postpartum depression… சமாளிப்பது எப்படி?

image

பிரசவத்துக்கு பின், பெண்களுக்கு மனச்சோர்வு (Postpartum depression) பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கையாள சில வழிகள் உள்ளன. ➤கணவரிடம் மனதில் தோன்றுவதை பேசுங்கள் ➤குழந்தை தூங்கும் நேரத்தில் நீங்களும் ஓய்வெடுங்கள் ➤வீட்டுவேலை, குழந்தை பராமரிப்பு பணிகளை கணவர் / குடும்பத்தினரிடம் பிரித்துக் கொடுங்கள் ➤சத்தான உணவை சாப்பிடுங்கள் ➤நடைபயிற்சி ➤தேவைப்பட்டால் மனநல ஆலோசகரை அணுகவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!