News April 21, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News August 13, 2025
ராஜினாமா செய்கிறார் மதுரை மேயர்

மதுரை மேயர் இந்திராணி (திமுக) ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹150 கோடி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்திராணியும் ராஜினாமா செய்யவுள்ளார்.
News August 13, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪அதிமுக Ex MP <<17389715>>மைத்ரேயன் <<>>திமுகவில் இணைந்தார்
✪ஆக.16 ‘நலம் <<17388198>>காக்கும்<<>> ஸ்டாலின்’ முகாம் ரத்து
✪வரி <<17388293>>சர்ச்சைக்கு<<>> மத்தியில் டிரம்ப்- PM மோடி சந்திப்பு
✪சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு ₹40 குறைந்தது
✪ <<17389134>>விபூதி<<>> வைக்கும் ரகசியம் சொன்ன பிரக்ஞானந்தா
News August 13, 2025
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் <<17389413>>மைத்ரேயன் <<>>நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் யாரும் மைத்ரேயனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.