News April 6, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2025

அதெல்லாம் முடியாது.. டிரம்ப் விடாப்பிடி

image

கார் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இருதரப்பும் ஜீரோ வரி விதிக்கலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனையை டிரம்ப் நிராகரித்துள்ளார். 20% வரி உயர்த்தியது உயர்த்தியதுதான் எனவும், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து தாங்கள் அதிகம் இறக்குமதி செய்தாலும், USA பொருள்களை அந்நாடுகள் வாங்குவதில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வர்த்தகப் பற்றாக்குறையை போக்க, தங்களுடைய கச்சா எண்ணெய்யை வாங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 8, 2025

39 பந்துகளில் சதம்

image

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

News April 8, 2025

இந்தியாவின் ‘தங்கமகன்’ காலமானார்

image

இந்திய ஹாக்கி ஜாம்பவான்களில் ஒருவரான ரக்பிர் லால்(95) காலமானார். ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் பொற்காலமான 1950களில், அணியின் முக்கிய வீரராக இருந்த ரக்பிர், ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்கள் (1952, 1956) வென்றார். பஞ்சாபில் போலீஸ் அணியை வழிநடத்திய இவர், தேசிய அளவிலும் 2 தங்கம், 2 வெள்ளி வென்றுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்த்த இவரின் மறைவுக்கு விளையாட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!