News April 6, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2025
மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்?… பெண் பரிதாப பலி

கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர், சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்புக்கு சிராஜுதினே காரணம் என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரித்து வருகிறது.
News April 7, 2025
பங்குச்சந்தைகளில் கடும் சரிவு.. சென்செக்ஸ் 2,227 வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,137ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 742.85 புள்ளிகள் (3.24%) வீழ்ச்சியடைந்து 22,161.60ஆக வர்த்தகமானது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர்த்த அனைத்து நிறுவன பங்குகளும் வீழ்ச்சி கண்டன. டாடா ஸ்டீல் பங்குகள் 7.33%, L&T பங்குகள் 5.78% சரிந்தன.
News April 7, 2025
ஒரே ஆண்டில் ₹2,243 கோடி.. பாஜகவுக்கு குவிந்த நன்கொடை

2023-24 நிதியாண்டில் பாஜக ₹2,243 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. தேசிய கட்சிகளில் பாஜகவே அதிக நன்கொடை பெற்றிருப்பதாகவும், காங்கிரஸ் ₹281.48 கோடி பெற்றுள்ளதாகவும் ADR கூறியுள்ளது. 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 211.72%, காங்கிரஸுக்கு 252.18% அதிக நன்கொடை கிடைத்து உள்ளதாகவும் ADR குறிப்பிட்டுள்ளது.