News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News April 12, 2025
திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்

திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அப்துல் ரசாக் மாெல்லா (90) பிரெய்ன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு காலமானார். கடந்த 1972-2021 வரை MLA-வாக இருந்துள்ளார். மே.வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் இடதுசாரி அரசு ஆட்சியில் நிலம், நில சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்தார். சிங்கூர் நில விவகாரத்தில் புத்ததேவ் அரசை விமர்சித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திரிணாமூலில் சேர்ந்தார்.
News April 11, 2025
‘ரெட்ரோ’ ஃபீவர்: VIBE பண்ண ரெடியாகுங்க மக்களே..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் 3வது சிங்கிளான ‘The One’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக 2ஆவது பாடலான ‘கணிமா’ பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. வரும் மே 1ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளதால், இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
News April 11, 2025
QR CODE-ஐ கண்டுபிடித்தது யார்?

பணப்பரிமாற்றத்திற்கும், ஆவண சரிபார்ப்பிற்கும் தற்போது QR CODE பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்த QR CODE-ஐ மசாஹிரோ ரஹா என்னும் ஜப்பான் என்ஜீனியரே 1994-ல் கண்டுபிடித்தார். GO எனும் விளையாட்டை விளையாடுகையில் இதை உருவாக்கும் திட்டம் உருவாகியது. அதன்பின்னர் தான் பணிபுரியும் டென்சோ வேவ் நிறுவனத்தில் உள்ள தனது குழுவினருடன் சேர்ந்து தற்போது இருக்கும் வடிவில் QR CODE-ஐ மேம்படுத்தினார்.