News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News January 17, 2026
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
திமுக அரசு கொடுத்த பால்கோவா: செல்லூர் ராஜு

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அவர், வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொங்கலுக்கு திமுக அரசு பணம் கொடுத்துள்ளது என்றார். மேலும், போதை கலாசாரம் ஒழிய, சட்டம் ஒழுங்கு காக்கப்பட, விலைவாசி குறைய திமுக ஆட்சி விலக வேண்டும் என்பது கனவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை இன்று(ஜன.17) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,280-க்கும், சவரன் ₹400 அதிகரித்து ₹1,06,240-க்கும் விற்பனையாகிறது. <<18877216>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 1 அவுன்ஸ்(28) 23 டாலர்கள் குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.


