News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
Similar News
News September 20, 2025
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவுக்கு போட்டியாக அதிமுகவில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை இபிஎஸ் தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் G.P.ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற இபிஎஸ், அதிமுக அடையாள அட்டைகளை வழங்கி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
News September 20, 2025
அன்புமணியை அடக்க டெல்லி செல்லும் ராமதாஸ்?

பாமக தலைவராக அன்புமணியை EC அங்கீகரித்திருந்தது. இதனை பின்னடைவாக கருதிய ராமதாஸ், அன்புமணியை அடக்க டெல்லி செல்வதே ஒரே வழி என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, PM மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளாராம். PM மோடியும் ராமதாஸ் மீது மதிப்பு கொண்டவர் என்பதால் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியின் ஆதரவை தன்பக்கம் திருப்புவாரா ராமதாஸ்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
News September 20, 2025
சத்தான காலை உணவுகள்

காலை உணவு, நாள் முழுவதும் அதிகப்படியாக சாப்பிடுவதைத் தடுத்து, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படலாம். மேலே, சில சத்தான காலை உணவுகள் போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. நீங்கள் காலை என்ன சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.