News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 9, 2026
சாக்ரடீஸின் பொன்மொழிகள்

*வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.*வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்தே கிடக்கும் போதுதான் தோல்வி வரும். *நாம் எதை இழந்துவிட்டாலும் இழக்காவிட்டாலும் கௌரவத்தை மட்டும் இழக்கக்கூடாது. இழக்க இடமும் தரக்கூடாது. *உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது.
News January 9, 2026
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் !

‘ஜனநாயகன்’ படம் ரீலிஸ் தள்ளிப்போன சோகத்தில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ படங்கள் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. விஜய் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. நீங்க எந்த படத்துக்கு போக போறீங்க?
News January 9, 2026
இணைய சேவை ஈரானில் முடக்கம்

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஈரானில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அரசு எதிரான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசு மீது மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


