News January 22, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் மதியம் 3.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா?
Similar News
News December 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹96,240-க்கும், கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹12,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களுக்கும் மேல் ஆபரணத் தங்கத்தின் விலை ₹96 ஆயிரத்திற்கும் கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
இந்திய அணியின் பெஸ்ட் T20 கேப்டனான SKY!

T20I போட்டிகளில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் (80%) திகழ்கிறார். அவர் இவர் தலைமையில் 35 போட்டிகளில் விளையாடி இந்திய அணி, 28-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையிலும், ஒரு போட்டி மழையால் ரத்தானது. இந்த பட்டியலில் ரோஹித் (79.83%) 2-வது இடத்திலும், கோலி (64.58%) 3-வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் சொதப்பினாலும், கேப்டனாக ஜொலிக்கிறார் SKY!
News December 10, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது அறிவிப்பு

அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் ITI அமைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொழில் பயிற்சி மையங்கள் இல்லாத இடங்களில் பயன்பாடின்றி இருக்கும் கட்டடங்களை ITI அமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ITI இருக்கும் இடங்கள் அல்லாத பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும். தொழில் மண்டலங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.


